ஆடவருக்கு ஒரு மாத சிறை, 4 ஆயிரம் வெள்ளி அபராதம்

சுங்கை பெட்டானி , செப்டம்பர் 12-

அரச பரிபாலனத்தை நிந்திக்கும் தன்மையிலான கருத்தை பதிவேற்றம் செய்த குற்றத்திற்காக ஆடவர் ஒருவருக்கு சுங்கைப்பட்டாணி மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று ஒரு மாத சிறை மற்றும் 4 ஆயிரம் வெள்ளி அபராதம் விதித்தது.

42 வயது நோர் இஸ்மாயில் அமரன் காசில்லாஹ் என்ற அந்த நபர் , மாஜிஸ்திரேட் எம். கலையரசி முன்னிலையில் நிறுத்தப்பட்டு, குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.

மற்ற மாநிலங்களின் வளங்களை கெடா சூறைபாடுவதைப் போலவும், கெடா சுல்தான் பற்றி அவதூறு தன்மையிலும் கருத்து பதிவேற்றம் செய்ததாக அந்த நபர் குற்றஞ்சாட்டப்பட்டார்.

கடந்த ஜுலை மாதம் 6 ஆம் தேதி அந்நபர் இக்குற்றத்தை புரிந்ததாக 1948 ஆம் ஆண்ட தேச நிந்தனை சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

WATCH OUR LATEST NEWS