கோலாலம்பூர், செப்டம்பர் 12-
ஹலால் சான்றிதழ் விவகாரத்தில் தற்போது ஏற்பட்டுள்ள சர்ச்சையானது மதத்திற்கும் இனத்திற்கும் இடையிலான உறவை சீர்குலைக்கும் என்பதுடன் இஸ்லாத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று பக்காத்தான் ஹராப்பானின் திரெங்கானு மாநிலத் தலைவர் டத்தோ ராஜா கமருல் பஹ்ரின் ஷா ராஜா அகமது தெரிவித்துள்ளார்.
இது போன்ற மதம் சார்ந்த விவகாரங்களில் ஒருவருக்கொருவர் சவால் விட்டுக்கொண்டு இருக்காமல் பிரச்னையை முறையான வழியின் கீழ் கையாள வேண்டும் என்று பக்காத்தான் ஹராப்பான் விரும்புவதாக ராஜா கமருல் கேட்டுக்கொண்டார்.
இதில் கிளந்தான் முப்தி டத்தோ முகமட் சுக்ரி முகமட் கூறிய கருத்து அனைத்து தரப்பினருக்கும் நன்மை பயக்கும் என்று அவர் குறிப்பிட்டார்..
முப்தியின் இந்த அணுகுமுறை மறைந்த கிளந்தான் முன்னாள் மந்திரி பெசார் டான்ஸ்ரீ நிக் அப்துல் அஜிஸ் நிக் மாட்டை நினைவுப்படுத்துகிறது.
பல மதப்பிரச்னைககளை மிகுந்த ஞானத்துடனும் நிக் அஜிஸ் கையாண்ட விதத்தை நமக்கு ஞாபகப்படுத்துகிறது என்று ராஜா கமருல் குறிப்பிட்டார்.