முன்னணி வான் போக்குவரத்து மையமாக சிலாங்கூர் உருவாக்கம்

ஷா ஆலம், செப்டம்பர் 12-

தென்கிழக்கு ஆசியாவின் முன்னணி வான்
போக்குவரத்து மையமாக சிலாங்கூர் துரித வளர்ச்சி கண்டு வருவதாக
முதலீடு, வர்த்தகம் மற்றும் போக்குவரத்து துறைக்கான ஆட்சிக்குழு
உறுப்பினர் Ng Sze Han கூறினார்.

இந்த இலக்கை அடையும் நோக்கில் மாநில அரசு குறிப்பிடத்தக்க
முதலீடுகளை ஈர்ப்பதற்கும் புதுமைகளைப் புகுத்துவதற்கும் உள்நாட்டு
நிபுணத்துவத்தை வளர்ப்பதற்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அவர் குறிப்பிட்டா்.
இன்று ஸ்கைபார்க் பிராந்திய வான் போக்குவரத்து மையத்தில்
நடைபெற்ற 2024 சிலாங்கூர் வான் போக்குவரத்து கண்காட்சியின்
தொடக்க நிகழ்வில் உரையாற்றிய போது அவர் குறிப்பிட்டார்.

பொருளாதார வளர்ச்சியை உறுதி செய்வதற்கும் சிலாங்கூர் மாநில
மக்களுக்கு உயர் வருமான தரும் வேலை வாய்ப்புகளை
உருவாக்குவதற்கும் இந்த முன்னெடுப்பு அவசியமாகிறது என்று அவர்
தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS