பிந்துலு, செப்டம்பர் 12-
சரவாக், பிந்துலு, சுங்கை லாலாங் – கில் இன்று பிற்பகலில் நிகழ்ந்த தீ விபத்தில் நீண்ட வீடுகளில் குடியிருந்த சுமார் 350 பேர் தங்கள் வீடுகளையும், உடமைகளையும் இழந்தனர்.
தீ நாலாபுறமும் சூழ்ந்துக்கொண்ட நிலையில் தங்கள் வீடுகளிலிருந்து எந்தவொருப் பொருளையும் எடுக்க முடியாமல் அனைவரும் கட்டியத்துணியோடு உயிர் தப்பியதாக தெரிவித்துள்ளனர்.
இந்த தீவிபத்து தொடர்பில் பிற்பகல் 3.22 மணியளவில் தாங்கள் அவசர அழைப்பை பெற்றதாக தீயணைப்பு, மீட்புப்படையினர் தெரிவித்தனர்.