ஜார்ஜ் டவுன் ,செப்டம்பர் 12-
பினாங்கில் பயான் பாரு மற்றும் பத்து மாவுங் ஆகிய பகுதிகளில் ஏற்பட்டு வரும் திடீர் வெள்ளப்பிரச்னைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று பயான் பாரு நாடாளுமன்ற உறுப்பினர் சிம் டிஸே சின் தெரிவித்துள்ளார்.
RTB எனப்படும் வெள்ளத் தடுப்புத் திட்டத்தின் கீழ் நடப்பு பலவீனங்கள் அகற்றப்பட்டு, சீர்படுத்தும் பணியை பினாங்கு மாநில அரசு மேற்கொள்ளவிருப்பதாக சிம் டிஸே சின் குறிப்பிட்டார்.
இது தொடர்பாக மாநில அரசாங்கம் விளக்கம் அளித்து விட்டது. இதன் பிறகு நிதி ஒதுக்கீடு மற்றும் வெளிப்படையிலான டெண்டர் முதலிய தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியுள்ளன என்று அவர் தெரிவித்தார்.