போர்ட் டிக்சன் , செப்டம்பர் 12-
நாட்டின் 2025 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் அடுத்த மாதம் 18 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தாக்கல் செய்யவிருக்கிறார்.
இந்த பட்ஜெட் மக்களின் நல்வாழ்வை மேம்படுத்துவதாக இருக்க வேண்டும். குறிப்பாக கல்வி மற்றும் சுகாதாரத்துறைகளில் அதீக முக்கியத்துவம் அளிப்பதாக இருக்க வேண்டும் என்று வங்கி அதிகாரி Thomas Bulen என்பவர் வலியுறுத்தியுள்ளார்.
கல்வி ரீதியாக பள்ளிகளின் கட்டமைப்பு மேம்படுத்தப்பட வேண்டும். குறிப்பாக பாழடைந்த தோற்றத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் அவற்றின் உள்கட்டமைப்புகள் மேம்படுத்துவதில் அரசாங்கம் அதீத கவனம் செலுத்த வேண்டும்.
நீண்ட காலமாகவே மோசமான நிலையில் உள்ள மற்றும் அடிப்படை வசதிகள் இல்லாத பள்ளிகளை சீரமைக்கவும், கற்றல், கற்பித்தல் தரத்தை உயர்த்துவதற்கு அவற்றின் வசதிகளை மேம்படுத்தவும் அதிக நிதியை அரசாங்கம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று அந்த வங்கியாளர் அரசாங்கத்தை கேட்டுக்கொண்டுள்ளார்.