குவாந்தன்,செப்டம்பர் 12-
தொழில்முனைவர்கள் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டுத்துறை துணை அமைச்சர் டத்தோ R. ரமணனுக்குதர்ஜா கெபேசரன் சுல்தான் அஹ்மத் ஷா பஹாங் யாங் அமத் டி முலியா – பெரிங்காட் பெர்டாமா ஸ்ரீ சுல்தான் அஹ்மத் ஷா பகாங் எனும் அந்தஸ்தை தாங்கிய டத்தோஸ்ரீ விருது வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளார்.
மேன்மை தங்கிய பகாங் சுல்தான், அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுதீன் அல்-முஸ்தபா பில்லா ஷா – வின் 65 ஆவது பிறந்த தினத்தையொட்டி, குவந்தான், பலாய் மஹ்கோட்டா இஸ்தானா அப்துல் அஜீஸ் அரண்மனையில் இன்று நடைபெற்ற விருதளிப்பு சடங்கில் டத்தோ ரமணனுக்கு இந்த உயரிய விருது வழங்கப்பட்டது.
சுல்தான் அப்துல்லா, இவ்விருதை டத்தோ ரமணனக்கு வழங்கி சிறப்பு செய்தார்.