171 பேருக்கு தடுப்புக்காவல், ஐஜிபி தகவல்

கோலாலம்பூர், செப்டம்பர் 12-

சிலாங்கூர் மற்றும் நெகிரி செம்பிலானிலுள்ள 20 சமூக நல இல்லங்களில் போலீசார் மேற்கொண்ட Op Global எனும் அதிரடி சோதனையில் கைது செய்யப்பட்டுள்ள 171 தனிநபர்கள், விசாரணைக்கு ஏதுவாக 7 நாட்களுக்கு தடுத்து வைப்பதற்கு நீதிமன்ற அனுமதி பெறப்பட்டள்ளதாக போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ ரஸாருதீன் ஹுசைன் தெரிவித்தார்.

அதேவேளையில் இவர்களின் பிடியில் சிக்கி, அடி, உதை மற்றும் பாலியல் கொடுமைக்கு ஆளானதாக நம்பப்படும் 402 சிறார்கள் மீட்கப்பட்ட தொடர்பில் ஒரு தொடர் நடவடிக்கையாக பல்வேறு அமைச்சுக்கள் மற்றும் அரசாங்க ஏஜென்சிகளுடன் இணைந்து போலீசார் ஒத்துழைப்பு நல்கி வருவதாக ஐஜிபி குறிப்பிட்டார்.

பள்ளியில் சேர்க்கப்பட வேண்டிய சிறார்களான இவர்களுக்கு கல்வி வழங்கப்படுதற்கான சாத்தியம் குறித்து கல்வி அமைச்சுடன் கலந்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக டான்ஸ்ரீ ரஸாருதீன் ஹுசைன் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS