அரசாங்கத்தில் பலவீனமான மலாய் கட்சிகள் / இஸ்லாம் அல்லாத தலைவர்கள் வரம்பு மீறுகின்றனர் / பாஸ் தலைவர் கூறுகிறார்

தெமெர்லோ , செப்டம்பர் 12-

Halal சான்றிதழ் விவகாரம் உட்பட பல்வேறு விவகாரங்களில் இஸ்லாம் அல்லாத உறுப்புக்கட்சிகளின் விவகாரங்களை கையாளுவதில் ஒற்றுமை அரசாங்கத்தில் இடம் பெற்றுள்ள மலாய் கட்சிகள் மிக பலவீனமாக இருப்பதாக பாஸ் கட்சித் தலைவர் அப்துல் ஹாடி அவாங் குற்றஞ்சாட்டியுள்ளார்.

அரசாங்கத்தில் உள்ள பெரும்பாலான கட்சிகள் மலாய்க்காரர்கள் மற்றும் இஸ்லாமியர்களால் வழி நடத்தப்பட்ட போதிலும் வரம்புமீறி செல்லும் இஸ்லாம் அல்லாத தலைவர்களால் விளைவிக்கப்படக்கூடிய சமயத்தின் புனிதம் சார்ந்த விவகாரங்களை கையாளுவதிலும், தற்காப்பதிலும் தோல்விக் கண்டு வருகின்றனர் என்று அந்த மதவாத கட்சித் தலைவர் கூறுகிறார்.

ஒற்றுமை அரசாங்கத்தில் உள்ள அம்னோ,பிகேர் மற்றும் அமானா போன்ற கட்சிகள் இஸ்லாம் அல்லாத தங்களின் உறுப்புக்கட்சிகளை கையாள முடியாத நிலையில் மிக பலவீனமாக காணப்படுகின்றன என்று பாஸ் தலைவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

நாட்டின் அதிகாரத்துவ சமயம் தொடர்புடைய விவகாரங்கள் குறித்து இஸ்லாம் அல்லாத சக உறுப்புக்கட்சிகளின் தலைவர்கள் கேள்வி எழுப்புவதற்கு ஒற்றுமை அரசாங்கத்தில் உள்ள இஸ்லாமிய கட்சிகள் உடந்தையாக இருந்து விடக்கூடாது என்று ஹாடி அவாங் எச்சரித்துள்ளார்.

WATCH OUR LATEST NEWS