அலோர் செட்டர்,செப்டம்பர் 13-
நாட்டின் பிரதமராக பொறுப்பு ஏற்பதற்கு தாம் இன்னும் தயாராக இல்லை என்று பாஸ் கட்சியின் கெடா மாநில மந்திரி பெசார் சனுசி நார் தெரிவித்துள்ளார்.
பிரதமராக வர வேண்டும் என்று தாம் லட்சியம் கொண்டிருக்கவில்லை என்றாலும் அப்படியொரு வாய்ப்பு கிட்டுமானால், அதனை ஏற்றுக்கொள்ளும் அளவிற்கு தம்மை இன்னும் தயார்படுத்திக்கொள்ளவில்லை. வேறு ஆளை தேடிக்கொள்ளுங்கள் என்று பெரிக்காத்தான் நேஷனல் தேர்தல் இயக்குநமான சனூசி குறிப்பிட்டார்.
பாஸ் கட்சியின் வருங்கால பிரதமர் என்று சனூசியை அந்த கட்சியின் பேராளர்கள் முத்திரைக்குத்தி வருவது தொடர்பில் கருத்து கேட்ட போது , கெடா மந்திரி பெசார் மேற்கண்டவாறு தெரிவித்தார்.