தற்கொலை முயற்சி, ஆடவரை போலீசார் காப்பாற்றினர்

ஈப்போ , செப்டம்பர் 13-

ஈப்போ, மேடன் கோபெங் அருகில் ஜாலான் டாக்டர் நஸ்ரின் ஷா சாலையின் மேம்பாலத்தில் தடுப்பு சுவர் விளிம்பில் நின்று கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக நம்பப்படும் ஆடவர் ஒருவர் போலீசார் மிக லாவகமாக பிடித்து இழுத்து காப்பாற்றினர்.

இச்சம்பவம் தொடர்பில் பாசிர் புதே போலீஸ் நிலையம் நேற்று இரவு 7.30 மணியளவில் ஓர் அவசர அழைப்பை பெற்றதாக பேரா மாநில போலீஸ் தலைவர் டத்தோ அசிசி மேட் அரிஸ் தெரிவித்தார்.

போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்த போது ஆடவர் ஒருவர், பாலத்தின் தடுப்பு சுவரின் இரும்பை பிடித்துக்கொண்டு நின்று கொண்டு இருந்ததை போலீசார் கண்டனர்.

பாலத்திலிருந்த கீழே விழுந்து தற்கொலை செய்து கொள்ளக்கூடும் என்ற அச்சத்தில் அந்த நபரை சமாதானப்படுத்தும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டதாக அவர் குறிப்பிட்டார்.

எனினும் அந்த நபர் பிடிவாதமாக பாலத்திலிருந்து கீழே இறங்க மறுத்து விட்டார்.இந்நிலையில் போலீசார் அதிரடியாக பாய்ந்து, அந்த நபரை கீழே இழுத்து காப்பற்றியதாக டத்தோ அசிசி மேட்கூறினார்.

ஒரு மியன்மார் பிரஜையான அந்த நபர், மது போதையில் இருந்தது தெரியவந்துள்ளது. அவர் பின்னர் பாசிர் புதே போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டார்.

WATCH OUR LATEST NEWS