ஹலால் சான்றிதழ் விவகாரம், அக்மாலை விசாரிக்காதது ஏன்?

கோலாலம்பூர், செப்டம்பர் 13-

Halal சான்றிதழ் விவகாரம் தொடர்பாக டிஏபி செபுதே நாடாளுமன்ற உறுப்பினர் தெரசா கோக் – க்கை மட்டும் போலீசார் விசாரணை செய்வது ஏன்? இது குறித்து விமர்சனம் செய்த அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் டாக்டர் முகமது அக்மல் சலே -வும் விசாரிக்கப்பட வேண்டும் என்ற கோரி செபுதே இளைஞர் பிரிவு போலீசில் புகார் செய்துள்ளது.

3R விவகாரம் தொடர்பில் கருத்து வெளியிட்ட போதிலும் அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் அக்மல் சலே – மீது போலீசார் நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்று செபுதே இளைஞர் பிரிவு தலைவர் ஜோயல் ஜலே கேள்வி எழுப்பினார்..

இதன் தொடர்பில் அக்மல் சலே- மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, நேற்று காலை 11 மணியளவில் கோலாலம்பூர், ஸ்ரீ பெட்டாலிங் போலீஸ் நிலையத்தில் ஜோயல் ஜலே புகார் செய்துள்ளார்.

இவ்விவகாரத்தில் பாரபட்சம் காட்டப்படக்கூடாது. அக்மல் சலே விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட வேண்டும் என்று போலீசாரை ஜோயல் ஜலே கேட்டுக்கொண்டார்.

WATCH OUR LATEST NEWS