ஜெர்டிஹ் , செப்டம்பர் 13-
2 பள்ளி விடுமுறை தவணைக்காலம் நாளை சனிக்கிழமை முதல் தொடங்குகிறது. பள்ளி விடுமுறையையொட்டி நாடு முழுவதும் உள்ள மலேசிய குடிநுழைவுத்துறையின் கடப்பிதழ் வெளியிடும் அலுவலகங்கள், வழக்கமாக சேவை நேரத்தை விட கூடுதலான 3 மணி நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
பள்ளி விடுமுறை காலத்தில் பலர். குடும்பத்தினருடன் வெளிநாடுகளுக்கு செல்லும் நிலை இருப்பதால் கடப்பிதழுக்கு விண்ணப்பம் செய்யும் மக்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம்.
இதனால், குடிநுழைவுத்துறை அலுவலகங்களில் கூட்ட நெரிசல் ஏற்படுவதை தவிர்க்க வரும் செப்டம்பர் 17 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வெள்ளிக்கிழமை வரையில் கடப்பிதழ் வெளியிடப்படும் குடிநுழைவு அலுவலகங்கள் காலை 8 மணி முதல் இரவு 8 மணி நேரம் வரையில் செயல்டும்.
இதேபோன்று சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை செயல்படும் என்று குடிநுழைவுத்துறை வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.