விட்டுக்கொடுக்கும் போக்கு ஒரு போதும் கடைப்பிடிக்கப்படாது

பெட்டாலிங் ஜெயா,செப்டம்பர் 13-

சமூக இல்லங்களில் உள்ள சிறார்கள் மிக மோசமாக நடத்தப்பட்ட சம்பவத்திற்கு பொறுப்பானர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் அரசாங்கம் ஒரு போதும் விட்டுக்கொடுக்கும் போக்கை கடைப்பிடிக்காது என்று சட்டத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அசாலினா ஓத்மான் கூறினார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

சிறார்கள் சம்பந்தப்பட்ட விவகாரத்தில் அவர்களின் நல்வாழ்வு மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றுக்கு அதீத முக்கியத்துவமும், முன்னுரிமையும் வழங்கப்படும். அவர்களுக்கு எதிராக நடத்தப்படும் எந்தவொரு துன்புறுத்தலும், பாலியல் கொடுமையும் சகித்துக்கொள்ளப்படாது என்று அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த புதன்கிழமை அதிகாலை தொடங்கி, சிலாங்கூர் மற்றும் நெகிரி செம்பிலானிலுள்ள 20 சமூக நல இல்லங்களில் போலீசாரின் சோதனையின் போது 402 சிறார்கள் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கருத்துரைக்கையில் அசாலினா ஓத்மான் மேற்கண்டவாறு கருத்துரைத்தார்.

WATCH OUR LATEST NEWS