கோலாலம்பூர், செப்டம்பர்
சிலாங்கூர் மற்றும் நெகிரி செம்பிலானில் உள்ள சமூக நல இல்லங்களில் போலீசார் மேற்கொண்ட அதிரடி சோதனையில் மீட்கப்பட்ட இளம் வயது பிள்ளைகளில் 13 பேர் ஓரினப்புணர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர் என்று சந்தேகிக்கப்படுவதாக போலீஸ் படைத் தலைவர் ஸ்ரீ ரஸாருதீன் ஹுசைன் தெரிவித்துள்ளார்.
பதின்ம வயதுடைய 13 பேர், மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது அவர்கள் உடல் ரீதியாகவும், பாலியல் ரீதியாகவும் துன்புறுத்தப்பட்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது என்று ஐஜிபி குறிப்பிட்டார்..
இந்த 13 பேரும், சிலாங்கூர் மற்றும் நெகிரி செம்பிலானில் உள்ள 20 சமூக நல இல்லங்களிலிருந்து மீட்கப்பட்ட 402 சிறார்களில் அடங்குவர்.
சம்பந்தப்பட்டவர்கள் ஓரினப்புணர்ச்சி செய்யப்பட்டது தொடர்பில் 2017 ஆம் ஆண்டு சிறார்கள் சட்டத்தின் கீழ் போலீசார், நான்கு விசாரணை அறிக்கைகளை திறந்துள்ளதாக ஸ்ரீ ரஸாருதீன் ஹுசைன் குறிப்பிட்டார்.
கடந்த புதன்கிழமை போலீசார் மேற்கொண்ட இந்த அதிரடி சோதனையில் மீட்கப்பட்ட 402 பேரும், 17 வயதுக்கு கீழ்பட்டவர்கள் ஆவார் என்று ஐஜிபி சுட்டிக்காட்டினார்.