ஜசின் , செப்டம்பர் 13-
மலாக்கா மாநில அரசின் துணை நிறுவனத்திற்கு சொந்தமான நிலத்தடி கேபள்களை களவாடிக்கொண்டு இருந்த ஆடவரை, தகவல் கிடைத்த ஆடுத்த சில நிமிடங்களிலேயே போலீசார் துரிதமாக கைது செய்தனர்.
மெர்லிமாவ், ஜாலான் முவார் – மெர்லகா மெர்லிமாவ் சாலையில் ஒரு எண்ணெய் நிலையத்திற்கு அருகில் நேற்று காலை 8.45 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவம் தொடர்பில் போலீசார் அவசர அழைப்பைப் பெற்றனர்.
தொலைத்தொடர்புத்துறை துணை நிலையத்திற்குள் நபர் ஒருவர் அத்துமீறி நுழைந்து இருப்பதாக கிடைக்கப்பெற்ற தகவலைத் தொடர்ந்து அந்த நபர் வளைத்துப்பிடிக்கப்பட்டதாக ஜாசின் மாவட்ட போலீஸ் தலைவர் அஹ்மத் ஜமீல் ரட்ஸி தெரிவித்தார்.