செபாங் , செப்டம்பர் 13-
71 வயது மூதாட்டியிடம் கொள்ளையடித்தப் பின்னர் அவரை பாலியல் பலாத்காரம் செய்த அந்நிய நாட்டுப் பிரஜை ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
இச்சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 12.18 மணியளவில் சைபர் ஜெயாவில் உள்ள ஓர் அடுக்குமாடி வீடமைப்புப் பகுதியில் நிகழ்ந்தாக சிப்பாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி வான் கமருல் அஸ்ரான் வான் யூசோப் தெரிவித்தார்.
அந்த வீடமைப்புப்பகுதியின் படிக்கட்டில் அமர்ந்திருந்த மூதாட்டிக்கு நேர்ந்த கதி குறித்து கிடைக்கப்பெற்ற போலீஸ் புகாரைத் தொடர்ந்து தேடுதல் வேட்டை தொடங்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
இதில் மதியம் 12.20 மணியளவில் சைபர் ஜெயாவில் அந்த அந்நிய ஆடவர் பிடிபட்டதாகஏசிபி வான் கமருல் குறிப்பிட்டார்.