ஜொகூர் , செப்டம்பர் 13-
ஜோகூர்பாரு, பாயு தம்போய் – யை நோக்கி நடந்து சென்று கொண்டிருந்த மியன்மார் பிரஜையை மோதி தள்ளி, மரணம் விளைவித்து விட்டு, தப்பிச் சென்ற வாகனமோட்டியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் கடும் காயங்களுக்கு ஆளான அந்த மியன்மார் பிரஜை, சம்பவ இடத்திலேயே மாண்டதாக ஜோகூர்பாரு செலத்தான் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ரவுப் செலமட் தெரிவித்தார்.
20 வயது மதிக்கத்தக்க அந்த மியன்மார் பிரஜையை மோதித்தள்ளியப் பின்னர், அவ்விடத்தில் நிற்காமலேயே தப்பி ஓடிவிட்ட அந்த காரோட்டி தீவிரமாக தேடப்பட்டு வருவதாக ஏசிபி ரவுப் செலமட்குறிப்பிட்டார்.