மஹ்கோட்டா இடைத் தேர்தலை பாதிகாது

தெலுக் இந்தான்,செப்டம்பர் 13-

Halal சான்றிதழ் விவகார சர்ச்சையில் அம்னோவிற்கும்,டிஏபி-க்கும் இடையில் பிணக்கு ஏற்பட்ட போதிலும் வரும் செப்டம்பர் 28ஆம் தேதி நடைபெறவிருக்கும் ஜோகூர், மஹ்கோட்டா சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் இரு கட்சிகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பில் எந்த பாதிப்பும் ஏற்பாடாது என்று டிஏபி உதவித் தலைவர் ங்கா கோர் மிங் அறிவித்துள்ளார்.

மஹ்கோட்டா சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் நாளை சனிக்கிழமை நடைபெறவிருக்கிறது.

இந்த இடைத் தேர்தலில் ஒற்றுமை அரசாங்கத்தில் இடம் பெற்றுள்ள ஓர் உறுப்புக்கட்சி என்ற முறையில் அம்னோவின் வெற்றிக்கு டிஏபி தனது ஒத்துழைப்பை நல்கும் என்று அவர் உறுதி அளித்தார்.

WATCH OUR LATEST NEWS