பதாங் காளி ,செப்டம்பர் 13-
நாட்டின் 67 ஆவது மெர்டேக்கா தினத்தை முன்னிட்டு பிரபல பதாங் காளி மூங்கில் பிரியாணி H.Q, தனது வாடிக்கையாளர்ளுக்காக பிரசித்திப்பெற்ற கொங்கு நாட்டு பாரம்பரிய உணவு வகையான மட்டன் குழம்பை உள்ளடக்கிய Konggu Natatu Package 2.0 போட்டியை அண்மையில் வெற்றிகரமாக நடத்தியது.
10 முதல் 15 பேர் சாப்பிடக்கூடிய, இந்தோனேசியாவில் விருது பெற்ற Konggu Natatu Package 2.0, அறிமுகப்படுத்தப்பட்டு, ஓராண்டு நிறைவையொட்டி ரொக்கப் பரிசு தொகையுடன் இப்போட்டியை பதாங் காளி மூங்கில் பிரியாணி H.Q, நடத்தியது.
பதாங் காளி மூங்கில் பிரியாணி H.Q, – உணவகத்திற்கு வருகை தந்து சுவையும், தனித்துவமும், பாரம்பரியமும் நிறைந்த Konggu Natatu Package 2.0 உணவு வகையை உண்டு, மகிழ்ந்த வாடிக்கையாளர்கள் பலர் மிகுந்த ஆர்வத்துடன் இப்போட்டியில் பங்கு கொண்டனர்.
பதாங் காளி மூங்கில் பிரியாணி H.Q, – யின் Konggu Natatu Package 2.0 குறித்து சமூக ஊடகங்களில் அதிகமான View, அதிகமான பகிர்வு மற்றும் அதிகமான likes என மூன்று கூறுகளின் அடிப்படையில் வெற்றி பெறும் முதல், இரண்டு மற்றும் மூன்று வெற்றியாளர்களுக்கு முறையே ஆயிரம் வெள்ளி, 500 வெள்ளி மற்றும் 350 வெள்ளி என பரிசுத்தொகை நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.
இதற்கான தேர்வு, கடந்த செப்டம்பர் 9 ஆம் தேதி நடைபெற்ற போது, இந்த மூன்று கூறுகளிலும் அதிகமானோரை கவர்ந்த 3 வெற்றியாளர்களை பதாங் காளி மூங்கில் பிரியாணி H.Q,தேர்வு செய்தது.
முதல் வெற்றியாளராக தினேஷ் விவேகானந்தர் , 2 ஆவது வெற்றியாளராக காயத்திரி முனுசாமி மற்றும் 3 ஆவது வெற்றியாளராக விக்னேஸ்வரி ராஜேந்திரன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
முதல் பரிசு, ஆயிரம் வெள்ளியை வென்று வாகை சூடிய தினேஷ் விவேகானந்தர் விவரிக்கையில் முதலில் பதாங் காளி மூங்கில் பிரியாணி – க்கும் / தமக்கு ஆதரவு தந்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்வதாக குறிப்பிட்டார்.
இரண்டாவது பரிசு, 500 வெள்ளியை வென்ற காயத்திரி முனுசாமி கூறுகையில் இது தமக்கு எதிர்பாராத வெற்றியாகும் என்றார்.
மூன்றாவது பரிசு, 350 வெள்ளியை வென்ற விக்னேஸ்வரி ராஜேந்திரன் விவரிக்கையில் பதாங் காளி மூங்கில் பிரியாணி -யின் உணவு மட்டுமின்றி சேவையும் திருப்திகரமாக இருந்தது என்றார்.
Konggu Natatu Package 2.0 போட்டியை வெற்றிகரமாக நடத்திய பதாங் காளி மூங்கில் பிரியாணி H.Q, மேலும் அதிகமான பதார்த்தங்களை உள்ளடக்கிய 15 முதல் 20 பேர் சாப்பிடக்கூடிய Konggu Naatu 3.0 போட்டியை வரும் செப்டம்பர் 16 ஆம் தேதி திங்கட்கிழமை மலேசியா தினத்தன்று தொடங்குகிறது.
Konggu Naatu 3.0 குறித்து மிகச்சிறந்த 3 Tik Tok Content Creator-களுக்கு முதல் பரிசு ஆயிரம் வெள்ளி, 2ஆவது பரிசு 500 வெள்ளி 3 ஆவது பரிசு 350 வெள்ளி காத்திருக்கிறது. வாடிக்கையாளர்கள் உற்சாகத்துடன் பங்கேற்குமாறு பதாங் காளி மூங்கில் பிரியாணி H.Q, உங்களை அழைக்கிறது.
நீங்கள் TIK TOK- கில் பதிவு செய்த காணொளியை பதாங் காளி மூங்கில் பிரியாணி Tik Tok Avccount- டில் தாஃ செய்யும்படி கேட்டுக்கெள்ளப்பட்டுள்ளனர்.
Caption
டினேஷ் விவேகானந்தா,
முதல் பரிசு ( RM 1,000 )
காயத்ரி முனுசாமி,
2 ஆவது பரிசு ( RM 500 )
விக்னேஸ்வரி ராஜேந்திரன்,
3 ஆவது பரிசு ( 350 )