குற்றச்சாட்டை மறுத்தார் ஐஜிபி

சிலாங்கூர், செப்டம்பர் 13-

சிலாங்கூர் மற்றும் நெகிரிசெம்பிலானில் உள்ள 20 சமூகநல இல்லங்களிலிருந்து உடல் ரீதியாகவும், பாலியல் ரீதியாகவும் துன்புறத்தப்பட்டதாக கூறப்படும் 402 பிள்ளைகள் மீட்கப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் விசாரணைக்கு உட்பட்டுள்ள Global Ikhwan Service and Business Holding நிறுவனத்தை போலீஸ் துறை தற்காகிறது என்று கூறப்படும் குற்றச்சாட்டை அதன் தலைவர் டான்ஸ்ரீ Razarudin Husain வன்மையாக மறுத்தார்.

அரச மலேசிய போலீஸ் படையைச் சேர்ந்த சில உயர் அதிகாரிகள் அந்த நிறுவனத்தின் முக்கிய அதிகாரிகளுடன் மிக நெருக்கமான நிலையில் எடுத்துக்கொண்டதாக கூறப்படும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருதைத் தொடர்ந்து ஐஜிபி இதனை தெரிவித்தார்.

அந்த நிறுவனத்தில் சம்பந்தப்பட்டுள்ள உள்ள சில தனிநபர்களுடன் தாமும் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டு இருப்பதையும் Razarudin குறிப்பிட்டார்.

திரெங்கானுவில் குதிரைப் பந்தயத்தின் போது அந்த புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. அத்தகைய புகைப்படங்கள் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ள காரணத்தினால் அந்த நிறுவனத்தின் நடவடிக்கைகளை தாம் ஆதரிப்பதாக பொருள்படாது என்று ஐஜிபி விளக்கம் அளித்துள்ளார்.

WATCH OUR LATEST NEWS