கோலாலம்பூர், செப்டம்பர் 13-
MYCEB எனப்படும் Malaysia Convention & Exhibition Bureau தலைவராக முன்னாள் மனித வள அமைச்சர் V. சிவகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். புதிய பதவிக்கான சிவகுமாரின் பதவிக்காலம். கடந்த ஆகஸ்ட் 30 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
MyCEB என்பது மலேசியாவின் சுற்றுலா, கலை மற்றும் கலாச்சார அமைச்சினால் கடந்த 2009 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட ஒரு ஸ்தாபனமாகும்.
இது மலேசியாவின் வணிக சுற்றுலா, வர்த்தக முத்திரை, அனைத்துலக வர்த்தக நிகழ்வுகள் மற்றும் கண்காட்சி போன்ற நிகழ்வுகளை ஏற்பாடு செய்து, மலேசிய சந்தையை வலுப்படுத்தும் ஓர் அரசாங்க ஏஜென்சியாகும்.
மடானி அரசாங்கத்தின் கீழ் MYCEB – க்கு சிவகுமார் தலைமையேற்பதை பெரிதும் வரவேற்பதாக அந்த ஏஜென்சி தெரிவித்துள்ளது.