காஜாங் ,செப்டம்பர் 13-
ஒற்றுமை அரசாங்கத்தில் இடம் பெற்றுள்ள மலாய்க்காரர் கட்சிகள், மிகவும் பலவீனமாக இருப்பதாக கூறியிருக்கும் பாஸ் கட்சி தலைவர் அப்துல் ஹாடி அவாங்கின் பேச்சை தாம் பொருட்படுத்தப் போவதில்லை என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
காஜாங், Masjid Al- Iman- பள்ளிவாசலில் வெள்ளிக்கிழமை தொழுகையில் கலந்து கொண்ட டத்தோஸ்ரீ அன்வாரிடம், இது தொடர்பாக செய்தியாளர்கள் கருத்து கேட்ட போது, பிரதமர் மேற்கண்டவாறு பதில் அளித்தார்.
ஹாடி அவாங் பேச்சை விட்டுத்தள்ளுங்கள் என்று கூறிய பிரதமர், மலேசியாவில் அவர் ஒருவர் மட்டுமே மிக பலசாலி என்றார்.
ஒற்றுமை அரசாங்கத்தில் இடம் பெற்றுள்ள மலாய்க்கார அல்லாத தலைவர்களை கட்டப்படுத்த முடியாத அளவிற்கு மலாய்க்கார கட்சிகள் மிக பலவீனமாக உள்ளன என்று ஹாடி அவாங் நேற்று பேசியிருந்தார்