ஐஸ்கிரீம் கடைக்குள் நுழைந்த திருடனுக்கு போலீசார் வலை வீச்சு

கோலா சிலாங்கூர், செப்டம்பர் 14-

கடந்த வியாழக்கிழமை, கோலசிலாங்கூர், Eco Grandue புன்சக் ஆலம்- மில் உள்ள ஒரு ஐஸ்கிரீம் Kios வர்த்தகத் தலத்தில் நுழைந்து பொருட்களை களவாடிய திருடன் ஒருவனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

காலை 10 மணியளவில் ஐஸ்கிரீம் கடையைத் திறப்பதற்கு வந்த பெண் பணியாளர் ஒருவர், பிரதான கதவு உடைக்கப்பட்டதைக் கண்டு, உள்ளே சென்று பார்த்த போது பொருட்கள் களவாடப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சிக்குள்ளானதாக கோலாசிலாங்கூர் மாவட்ட இடைக்கால போலீஸ் தலைவர் துணை கண்காணிப்பாளர் முகமட் அம்பியா நோர்டின் தெரிவித்தார்.

இது தொர்பாக அந்த ஐஸ் கிரீம் வர்த்தகத் தலத்தின் உரிமையாளர் செய்து கொண்ட போலீஸ் புகாரைத் தொடர்ந்து ஆடவர் ஒருவர் தேடப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS