பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியுடன் ஒத்துழைப்பு இல்லை

தெமர்லோ,செப்டம்பர் 14-

டான்ஸ்ரீ முகைதீன் யாசின் தலைமையிலான பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியில் ஓர் உறுப்புக்கட்சியாக விளங்கும் பாஸ், டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான பக்காத்தான் ஹராப்பானுடன் ஒரு போதும் அரசியல் ஒத்ழைப்பை கொண்டிருக்காதது என்று அதன் தலைவர் அப்துல் ஹாடி அவாங் திட்டவட்டமாக தெரிவித்தார்.

பெரிக்காத்தான் நேஷனலில் ஓர் உறுப்புக்கட்சியாக பாஸ் தொடர்ந்து தன்னை தற்காத்துக்கொள்ளும். அதேவேளையில் இஸ்லாமியர்களின் நலனுக்காக தொடங்கப்பட்ட முஃபக்கத் நசியனால் கூட்டணிக்கு தொடர்ந்து புத்துயிர் அளிக்கப்படும் என்று நேற்றிரவு பகாங், தெமர்லோவில் பாஸ் கட்சியின் முஸ்லிமாட் நிகழ்வில் உரையாற்றுகையில் ஹாடி அவாங் இதனை குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS