பெட்டாலிங் ஜெயா,செப்டம்பர் 14-
ஒரு மதவாதக் கட்சியான பாஸ், சரவா மாநிலத்தில் ஊடூரவ முடியாது என்று அந்த மாநிலத்தின் முன்னணி தலைவர் ஒருவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
பாஸ் கட்சியை சரவாக் மக்கள் முற்றாக நிராகரிப்பர் என்று ஆளும் சரவா மாநில கட்சியான பார்ட்டி பெசகா பூமிபுதேரா பெர்சத்து-வின் உதவித் தலைவர் அப்துல் கரீம் ரஹ்மான் ஹம்சா தெரிவித்தார்.
பாஸ் கட்சியின் முஃபக்கத் சித்தாந்தத்தை ஏற்றுக்கொள்ளக்கூடிய மனோநிலையில் சரவாக் மக்கள் இல்லை என்பதையும் அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.