கரடியினால் தாக்கப்பட்ட ஆடவர் மரணம்

கோத்தா பாரு,செப்டம்பர் 14-

கரடியினால் தாக்கப்பட்டு, கடும் காயங்களுடன் கடந்த 6 நாட்களாக மருத்துவமனையில் உயிருக்குப் போராடி வந்த ஆடவர் ஒருவர், சிகிச்சை பலனின்றி இன்று உயரிழந்தார்.

கடந்த செப்டம்பர் 8 ஆம் தேதி கிளந்தான், குவா முசாங், ஜெரெக், கம்போங் டாலம் செண்டுக்- கில் கிராமத்திற்கு அருகில் உள்ள வனப்பகுதியில் பறவைகளை பிடிப்பதற்கு சென்ற 33 வயதுடைய முகமது ஜாக்கி சே முகமது என்பவர் கரடியினால் கடுமையாக தாக்கப்பட்டார்.

மிக கவலைக்கிடமான சூழ்நிலையில் அவர் மீட்கப்பட்டு, குபாங் கெரியன்- னில் உள்ள மலேசிய அறிவியல் பல்லைக்கழக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

கடும் ரத்தப் போக்கின் காரணமாக சுயநினைவின்றி இருந்து வந்த அந்த நபர், இன்று அதிகாலை 3.45 மணியளவில் மரணமுற்றதாக தெரிவிக்கப்பட்டது.

WATCH OUR LATEST NEWS