கோலாலம்பூர், செப்டம்பர் 14-
நாட்டின் தேசியக் கல்விக் கொள்கையில் மாற்றம் மற்றும் உயர் நிலைக்கல்விக்கான அணுகுமுறைக்கு ஏற்ப பொதுச் சேவைத்துறை என்று அழைக்கப்படும் அரசாங்க வேலை வாய்ப்புகளில் குறைந்த பட்சம் கல்வித் தகுதி வரம்பு எஸ்.பி.எம் என நிர்ணயிக்கப்பட்டள்ளது.
அரசாங்க வேலை வாய்ப்புகளில் 11 பிரிவுகளுக்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்த குறைந்த பட்சம் மூன்றாம் படிவ அரசாங்க மதிப்பீட்டு சோதனையான எஸ்.ஆர்.பி அல்லது பிடி 3 கல்வித் தகுதி, தற்போது எஸ்.பி.எம் நிலைக்கு உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் 11 பிரிவுகளில் உள்ள வேலை வாய்ப்புகளில் குறைந்த பட்ச கல்வித் தகுதியாக எஸ்.பி.எம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அரசு வேலை வாய்ப்புகளில் வாகனம் ஓட்டுநர், இயந்திரங்களை இயக்குபவர்கள், பொது வேலையாட்கள் உட்பட 11 பிரிவுகளை உள்ளடக்கிய வேலை வாய்ப்புகளுக்கு குறைந்த பட்ச கல்வித் தகுதியாக எஸ்.பி.எம் கோரப்படும் என்று பொதுச் சேவைத்துறை அறிவித்துள்ளது.