குவாந்தன்,செப்டம்பர் 14-
குவந்தான், ஜாலன் குவாந்தன் – கெமாமன் சாலையின் 44 ஆவது கிலோமீட்டரில் மூன்று வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்தில் கார் ஒன்று தீப்பற்றிக்கொண்டதில் தொழிற்சாலை ஊழியர் ஒருவர் உயிரிழந்தார்.
இன்று காலை 7.20 மணியளவில் நிகழ்ந்த இந்த விபத்தில் இரண்டு கார்கள் மற்றும் ஒரு லோரி சம்பந்தப்பட்டு இருந்தன. இதில் Proton Saga- காரை செலுத்திய கோலத்திரெங்கானு , கம்போங் காங் டோக் நாசெக் – கைச் சேர்ந்த ஒரு தொழிற்சாலை ஊழியரான 51 வயது அப்துல் ஹலீம் அலி என்பவர் உயிரிழந்தார்.
Perodua Kancil காரை செலுத்திய 27 வயது மாது மற்றும் 49 வயது லோரி ஓட்டுநர் ஆகியோர் காயமுற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.