செப்பாங் ,செப்டம்பர் 14-
71 வயது மூதாட்டியிடம் கொள்ளையடித்ததுடன் அவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக கைது செய்யப்பட்ட உணவக உதவியாளர் ஒருவரை விசாரணைக்கு ஏதுவாக 7 நாட்களுக்கு தடுத்து வைப்பதற்கு நீதிமன்ற ஆணையை போலீசார் பெற்றனர்.
சைபர்ஜெயாவில் உள்ள ஒரு அபார்ட்மெண்ட்- வீட்டில் நிகழ்ந்த இச்சம்பவம் தொடர்பில் ஓர் அந்நியத் தொழிலாளரை போலீசார் கைது செய்துள்ளனர். அந்த நபரை வரும் செப்டம்பர் 20 ஆம் தேதி வரை தடுத்து வைப்பதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியிருப்பதாக சிப்பாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி கமருல் அஸ்ரான் வான் யூசோப் தெரிவித்தார்.
பின்னிரவு 12.08 மணியளவில் அந்த அடுக்குமாடி வீட்டின் படிகட்டில் நிகழ்ந்தாக கூறப்படும் இச்சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட மூதாட்டி செய்து கொண்ட போலீஸ் புகாரைத் தொடர்ந்து அந்த அந்நிய நாட்டவரை போலீசார், அன்றைய தினமே சைபர் ஜெயாவில் கைது செய்ததாக ஏசிபி கமருல் அஸ்ரான் குறிப்பிட்டார்.