தோட்டத் தொழிலாளர் சங்கத்ததின் தலைமைத்துவ பயிற்சி / 50 உறுப்பினர்கள் பங்கெடுப்பு

சுங்கைப்பட்டாணி ,செப்டம்பர் 14-

தேசியத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் கெடா, பெர்லிஸ் மற்றும் பினாங்கு மாநில கிளையின் ஏற்பாட்டில் மனிதவள அமைச்சின் தொழிற்சங்க விவகார இலாகாவின் ஒத்துழைப்புடன், தோட்டத் தொழிற்சங்க அங்கத்தினர்களுக்காக தலைமைத்துவப் பயிற்சி, கடந்த புதன்கிழமை கெடா, கெடா சுங்கைப்பட்டாணியில் அமைந்துள்ள Purest தங்கும் விடுதில் மிகச்சிறப்பாக நடைபெற்றது.

காலை 8.00 மணியளவில் தொடங்கிய இந்த தலைமைத்துவப் பயிற்சியில் தோட்டத் தொழிற்சங்கத்தைச் சேர்ந்த 50 அங்கத்தினர்கள் கலந்து கொண்டனர்.

தொழிலாளர்களுக்கு தேவையான தகவல்களைப் பகிர்ந்துக் கொள்வத்தற்காக அரசாங்க இலாகாவிலிருந்து நான்கு அதிகாரிகள் வருகை தந்து, பயிற்சியை வழிநடத்தியதாக தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் கெடா ,பெர்லிஸ் மற்றும் பினாங்கு மாநில கிளையின் செயலாளர் இ. சந்தனதாஸ் தெரிவித்தார்.

தொழிற் சங்க விவகார இலாகாவின் 10 ஆயிரம் வெள்ளி மானியத்தில் இந்த பயிற்சி நடத்தப்பட்டது.

தொழிற் சங்க விவகார இலாகா , கெடா மாநில தொழில் இலாகா, சொக்சோ மற்றும் பணியிட சுகாதார, பாதுகாப்பு இலாகா ஆகியவற்றின் பிரதிநிதிகள் இந்த பயிற்சியை வழிநடத்தியதாக குறிப்பிட்ட சந்தனதாஸ், பயிற்சியின் நோக்கத்தையும் திசைகளிடம் விவரித்தார்.

இது தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் கெடா, பெர்லிஸ், பினாங்கு கிளையின் முதல் தலைமைத்துவ பயிற்சியாகும். இந்தப் பயிற்சியை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் டத்தோ ஜி. சங்கரன் சிறப்புரை வழங்கி, முடித்து வைத்ததாக சந்தனதாஸ் தெரிவித்தார்.

பயிற்சியில் கலந்து கொண்ட அனைத்து அங்கத்தினர்களுக்கும் டத்தோ ஜி. சங்கரன் நற்சான்றிதழ்களை எடுத்து வழங்கினார்.

இந்நிகழ்வில் தோட்டத் தொழிற்சங்கத்தின் கெடா, பெர்லிஸ், பினாங்கு மாநில கிளையின் தலைவர் கணேசன் மற்றும் தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் நிதி செயலாளர் நெமிநாதன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

படவிளக்கம்

ஐ. சந்தனதாஸ்,
செயலாளர், கெடா, பெர்லிஸ், பினாங்கு NUPW

WATCH OUR LATEST NEWS