கோலாலம்பூர், செப்டம்பர் 14-
நாட்டின் விவசாயத்துறை வடிவமைப்பை மாற்றுவதில் முழு வீச்சில் ஈடுபட்டு வரும் விவசாய மற்றும் உணவு பாதுகாப்புத்துறை அமைச்சர் முகமது சாபு -வை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வெகுவாக பாராட்டினார்.
அடுத்த ஓரிரு ஆண்டு காலக்கட்டத்தில் நாட்டின் விவசாயத்துறையின் வடிவமைப்பு மிகப்பெரிய மாற்றத்தை காணும் என்று பிரதமர் நம்பிக்கைத் தெரிவித்தார்.
விவசாயம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சுக்கு தலைமையேற்றது முதல் விவசாயத்துறையை மேம்படுத்துவதில் முகமது சாபு மிகப்பெரிய பங்களிப்பை வழங்கி வருவதாக பிரதமர் புகழாரம் சூட்டினார்.
இன்று சனிக்கிழமை, Malaysia Agro Exposition Park Serdang – விவசாயப் பூங்காவில் 2024 ஆம் ஆண்டுக்கான விவசாயம் மற்றும் தோட்டக்கலை மீதான கண்காட்சியை அதிகாரப்பூர்மாக தொடக்கி வைத்து உரையாற்றுகையில் பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.