தொழிற்சாலை ஊழியர் கொலை: 7 பேர் கைது

கோலாலம்பூர், செப்டம்பர் 14-

பகாங், பெந்தோங்- கில் தொழிற்சாலை ஊழியர் ஒருவர் கொலை செய்யப்பட்டது தொடர்பில் போலீசார் ஏழு நபர்களை கைது செய்துள்ளனர்.

27 க்கும் 39 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த ஏழு பேரும், இக்கொலை சம்பவத்திற்கு பின்னர் பெந்தோங் – ஜாலான் சேகர் மேடாங் என்ற இடத்தில் கார் ஒன்றின் மூலமாக தப்பிச் செல்ல முயற்சித்த போது அனைவரும் வளைத்துப் பிடிக்கப்பட்டதாக பகாங் மாநில போலீஸ் தலைவர் டத்தோக் யஹாயா ஓத்மான் தெரிவித்தார்.

பெந்தோங்கில் உள்ள ஒரு தொழிற்சாலையில் நேற்று இரவு 11 மணியளவில் ஆடவர் ஒருவர் கடுமையான வெட்டுக்காயங்களுடன் இறந்து கிடந்தது கண்டு பிடிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

ஓர் அந்நிய நாட்டவரான 38 வயதுடைய அந்த தொழிச்சாலை ஊழியரின் உடலில் ஆழமான வெட்டுக்காயங்கள் காணப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

இக்கொலை தொடர்பில் பிடிபட்டுள்ள எழுவரையும் வரும் 7 நாட்களுக்கு தடுத்து வைப்பதற்கான நீதிமன்ற ஆணையை போலீசார் பெற்றுள்ளதாக டத்தோக் யஹாயா ஓத்மான் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS