குளுவாங் , செப்டம்பர் 14-
இம்மாதம் 28 ஆம் தேதி நடைபெறவிருக்கும் ஜோகூர், மஹ்கோட்டா சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் அந்த தொகுதியை பாரிசான் நேஷனல் தற்காத்துக்கொள்வதற்கு பக்காத்தான் ஹராப்பான் உதவும் என்று அதன் பொதுச் செயலாளர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுதியோன் இஸ்மாயில் இன்று உறுதி அளித்துள்ளார்.
கிளந்தான், குவா மூசாங் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்பட்ட நெங்கிரி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் பாரிசான் நேஷனல் வெற்றிப் பெறுவதற்கு பக்காத்தான் ஹராப்பான் முழு வீச்சில் உதவியது.
அவ்வாறு உதவியதைப் போல மஹ்கோட்டா சட்டமன்றத்தொகுதி இடைத்தேர்தலிலும் அந்த கூட்டணிக்கு பாக்காத்தான் ஹராப்பான் உதவிக் கரம் நீட்டும் என்று குளுவாங்கில் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில் உள்துறை அமைச்சருமான ஸ்ரீ சைபுடின் இதனை தெரிவித்தார்.