போலீசாரின் கண்காணிப்பில் மேலும் 39 சமூக நல இல்லங்கள் / ஐஜிபி தகவல்

கோலாலம்பூர், செப்டம்பர் 14-

இயற்கைக்கு மாறான உறவு / அடி, உதை, சித்ரவதை என சொல்லொண்ணா துயரத்திற்கு ஆளானதாக கூறப்படும் 20 சமூக நல இல்லங்களிலிருந்து 402 பிள்ளைகள் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணையை போலீசார் தீவிப்படுத்தியுள்ளனர்.

அதேவேளையில் இந்த சமூக நல இல்லங்களுடன் தொடர்பு கொண்டுள்ளதாக நம்பப்படும் GLOBAL IKWAN SERVICES AND BUSINESS HOLDING நிறுவனத்துடன் தொடர்பில் இருப்பதாக கூறப்படும் மேலும் 39 சமூக நல இல்லங்கள் தற்போது போலீசாரின் அணுக்கமான கண்காணிப்பில் இருப்பதாக போலீஸ் படைத் தலைவர் டான் ஸ்ரீ ரஜருதீன் ஹுசைன் தெரிவித்துள்ளார்.

கடந்த புதன்கிழமை சிலாங்கூர், நெகிரி செம்பிலாானில் உள்ள 20 சமூக ந இல்லங்களில் போலீசார் மேற்கொண்ட அதிரடி சோதனையில் 402 சிறார்கள் மீட்கப்பட்டதுடன் 171 சந்தேகப் பேர்வழிகள் கைது செய்யப்பட்டதாக ஐஜிபி குறிப்பிட்டார்.

இதில் வயது குறைந்த 13 பேர் ஓரினப்புணர்ச்சியில் ஈடுபடுத்தப்பட்டு இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. இது தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக தற்போது போலீசாரின் RADAR கண்காணிப்பில் இருந்து வரும் மேலும் 39 சமூக நல இல்லங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கான சாத்தியம் இருப்பதையும் டான் ஸ்ரீ ரஜருதீன் ஹுசைன் மறுக்கவில்லை. .

WATCH OUR LATEST NEWS