வாகனம் தீப்பற்றிக்கொண்டது, நால்வர் உயிர் தப்பினர்

குவாந்தன்,செப்டம்பர் 17-

பகாங், பெந்தோங் டோல் சாவடிக்கு அருகில் இன்று மதியம் வாகனம் ஒன்று திடீரென்று தீப்பிடித்துக்கொண்டதில் நால்வர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

இயந்திரத்திலிருந்து புகை வருவதைக் கண்ட அதன் ஓட்டுநர், வாகனத்தை சாலையோரத்தில் நிறுத்தி விட்டு, அனைவரும் அவசர அவசரமாக வெளியேறியதால் தீ வாகனத்தை சூழ்வதற்குள் அனைவரும் உயிர் தப்பியதாக பகாங் மாநில தீயணைப்பு, மீட்புப்படையினர் தெரிவித்தனர்.

இதில் அந்த வாகனம் 80 விழுக்காடு சேதமுற்றது.

WATCH OUR LATEST NEWS