கோலாலம்பூர், செப்டம்பர் 17-
வேகக்கட்டுப்பாட்டை இழந்ததாக நம்பப்படும் மோட்டார் சைக்கிளோட்டி ஒருவர், லோரியின் அடியில் சிக்கி உயிரிழந்தார். இச்சம்பவம் இன்று காலை 9 மணியளவில் கிள்ளான் பள்ளத்தாக்கு NKVE நெடுஞ்சாலையின் 22.2 ஆவது கிலோ மீட்டரில் நிகழ்ந்தது.
தலையில் பலத்த காயங்களுக்கு ஆளான அந்த மோட்டார் சைக்கிளோட்டி, சம்பவ இடத்திலேயே மாண்டதாக பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ் துணைத் தலைவர் சுப்ரிதேந்தன் எம். ஹுசின் தெரிவித்தார்.
இவ்விபத்து குறித்து 1987 ஆம் ஆண்டு போக்குவரத்து சட்டத்தின் கீழ் விசாரணை செய்யப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.