சபா பெர்னாம் , செப்டம்பர் 17-
சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த கார் ஒன்றின் பூத்திலிருந்து பாதுகாவலர் ஒருவரின் சடலத்தை போலீசார் மீட்டுள்ளனர்.
சபா பெர்னாம், தமன் பெர்டாமா, ஜாலான் பாசிர் என்ற இடத்தில் சாலையோரத்தில் சந்தேகத்திற்கு இடமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த கார் குறித்து பொது மக்களிடமிருந்து நேற்று மாலையில் போலீசார் தகவல் பெற்றுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், Proton Saga BLM ரக காரை சோதனை செய்த போது, காரின் பூத்தில் பாதுகாவலர் ஒருவர், சுயநினைவின்றி கிடந்தது கண்டு பிடிக்கப்பட்டதாக சபா பெர்னாம் மாவட்ட போலீஸ் தலைவர் ராபின் குஹா தாகுர்தா தெரிவித்தார்.
அந்த ஆடவர் குறித்து மருத்துவக்குழுவினர் சோதனை செய்ததில் அவர் இறந்து விட்டது உறுதி செய்யப்பட்டது.
அவரின் மரணத்தில் குற்றத்தன்மை இருப்பது தெரியவந்துள்ளதால் குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் விசாரரணை அறிக்கை திறக்கப்பட்டுள்ளதாக ராபின் குஹா குறிப்பிட்டார்.