பெட்டாலிங் ஜெயா,செப்டம்பர் 17-
கோலா கெடா நீர்பகுதியில் கடல் அலைகள் 5 மீட்டர் உயரம் வரை மேலோங்கியதைத் தொடர்ந்து லங்காவிற்கும், கோல பெர்லிஸிசுக்கும் இடையிலான Feri சேவைகள் ரத்து செய்யப்பட்டன. இதனால் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் பெரும் பரிதவிப்புக்கு ஆளாகினர்.
தொடர்ந்து வந்த நான்கு நாள் விடுமுறையை உல்லாசமாக கழிப்பதற்காக லங்காவிக்கு வந்த பலர், உரிய நேரத்தில் அந்த தீவை விட்டு திரும்ப முடியாமல் பெரும் சிரமத்திற்க ஆளானதாக தெரிவிக்கப்பட்டது.
நேற்று மதியம், லங்காவியை நோக்கி சென்று கொண்டிருந்த மூன்று Feri- கள் பலத்த காற்று, கடல் அலையால் பயணத்தை தொடர முடியாமல் மீண்டும் படகுத்துறைக்கே திரும்பின.
நேற்றும், இன்றும் நான்கு Feri- சேவைகள் ரத்து செய்யப்பட்டன. இதனால் இரண்டாயிரத்து 154 பயணிகள் பாதிக்கப்பட்டதாக பிரதான Feri சேவை நிறுவனமான Konsortium Ferrylines Ventures Sdn. Bhd. நிறுவனத்தின் நிர்வாகி பஹரின் பஹரோம் தெரிவித்தார்.
வழக்கத்திற்கு மாறாக கடல் அலைகள் மேலோங்கியிருப்பது, பெர்ரிகள் பயணம் செய்வதற்கு பாதுகாப்பானது அல்ல என்று அவர் குறிப்பிட்டார்.