கூலிம் மாவட்டத்தில் காவல்நிலையம் உட்பட பல இடங்களில் வெள்ளம்

கெடா , செப்டம்பர் 17-

கெடா, கூலிம் மாவட்டத்தில் இன்று அதிகாலையில் பெய்த கனத்த மழையியில் பல இடங்களில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது. கூலிம் போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் முழங்கால் அளவிற்கு நீர் மட்டம்ட உயர்ந்தது.

இந்த திடீர் வெள்ளத்தில் கம்போங் தருல் அமன், கம்போன் ஏர் மேராஹ் உப்பட பல பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதில் சுமார் 70 குடும்பங்கள் பெரும் அவதிக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டது.

தவிர முகிம் செர்டாங், முகிம் பாகன் சேமக் மற்றும் முகிம் சுங்கை கெச்சில் ஹிலிர் ஆகிய பகுதிகளும் பாதிக்கப்பட்டதாக பொது தற்காப்புப்படையினர் தெரிவித்தனர்.

செய்தி & படம் : ஹேமா எம்.எஸ். மணியம்

WATCH OUR LATEST NEWS