ஆடவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்

கோலாலம்பூர், செப்டம்பர்

ஜாலான் கோலாலம்பூர்- ரவாங் சாலையின் 16 ஆவது மைலில் மரம் ஒன்று, கார் மீது சாய்ந்ததில் அதன் ஓட்டுநர் அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினார்.

இச்சம்பவம் நேற்று மதியம் 1.20 மணியளவில் நிகழ்ந்தது. பலத்த காற்று மற்றும் கனத்த மழைக்கு மத்தியில் இச்சம்பவம் நிகழ்ந்ததாக தீயணைப்பு, மீட்புப்படையினர் தெரிவித்தனர்.

இதில் Nissan Xtrail காரில் பயணம் செய்த 38 வயது நபர், எவ்வித காயமின்றி உயிர் தப்பியதாக தெரிவிக்கப்பட்டது.

WATCH OUR LATEST NEWS