புத்ராஜெயா,செப்டம்பர் 18-
ஓர் இந்திய தம்பதியருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக்கோரி, போலீஸ் படைத்தலைவருக்கு முறையீடு
சிங்கப்பூரிலிருந்து பழைய இரும்புப்பொருட்களை கொள்முதல் செய்வதற்கு ஓர் இந்திய நபருக்கு தாங்கள் செலுத்திய 15 லட்சம் வெள்ளியில், எஞ்சியத் தொகையை திரும்ப பெறும் முயற்சியில் தங்களுக்கு எதிராக பொய் புகார் செய்து,/ சட்டத்தை தவறாக பயன்படுத்தி வரும் சம்பந்தப்பட்ட நபர் மற்றும் அவரின் மனைவிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக்கோரி, இந்திய வர்த்தக சகாக்களை உள்ளடக்கிய ஐவர், போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ ரஸாருதீன் ஹுசைன் -னிடம் முறையீடு செய்துள்ளனர்.
சிங்கப்பூரிலிருந்து பழைய இரும்புப்பொருட்களை வாங்குவதற்கு கிட்டத்தட்ட 30 லட்சம் வெள்ளி மதிப்பிலான திட்டத்தை தங்களிடம் ஏற்படுத்திக்கொடுக்க முன்வந்த கிள்ளானை தலமாக கொண்ட ஜெயா ஷர்மா என்பவருக்கு, ஐவரை வர்த்தக சகாக்களாக உள்ளடக்கிய தங்களின் சித்தியவான், ரக்ஷா மெட்டல் நிறுவனம், முன்பணமாக 15 லட்சம் வெள்ளியை கடந்த மே மாதம் முற்பகுதியில் செலுத்தியதாக அந்த நிறுவனத்தின் வர்த்தக சகாவான விக்னேஸ்வரராவ் ரவீந்திரன் தெரிவித்தார்.
ஆனால், ஜெயா ஷர்மா வாக்குறுதி அளித்ததைத் போல பழைய இரும்புப்பொருட்களை கொள்முதல் செய்வதற்கு தாமும் தங்களின் சகாக்களும் சிங்கப்பூருக்கு சென்ற போது அப்படியொரு திட்டம் இல்லை என்பது தங்களுக்கு தெரியவந்ததாக விக்னேஸ்வரராவ் தமது போலீஸ் புகாரில் குறிப்பிட்டார்.
தாம் உட்பட விஜி, கிரீஸ், குணா மற்றும் மஹா ஆகியோரை உள்ளடக்கிய ஐந்து வர்த்தக சகாக்கள், ஜெயா ஷர்மா – வை தொடர்பு கொள்ள முயற்சித்த போது, அவரை தொடர் கொள்ள முடியாமல் போனது.
இறுதியில் தங்களின் வர்த்தக சகாக்கள்,/ ஜெயா ஷர்மா – வை தொடர்பு கொள்வதில் வெற்றி பெற்ற நிலையில், முன்பணம் 15 லட்சம் வெள்ளி செலுத்தப்பட்ட குத்தகை கிடைக்காமல் போனதற்கு அந்த நபர் பல்வேறு சாக்குப்போக்குகளை கூறியதாக விக்னேஸ்வரராவ் குற்றஞ்சாட்டினார்.
கடந்த ஜுன் முதல் தேதி ஷா ஆலாம், தாமன் ஸ்ரீ மூடா-வில் சுமார் 20 ஆடவர்களின் பாதுகாப்புடன் ஜெயா ஷர்மா -, தங்கள் வர்த்தக சகாக்களை சந்தித்த போது, தங்களிடம் பெற்ற 15 லட்சம் வெள்ளியை திரும்ப செலுத்துவதாக உறுதி அளித்தார். அதன்படி கட்டம் கட்டமாக 10 லட்சத்து 30 ஆயிரம் வெள்ளியை செலுத்தினார்.
எஞ்சியப்பணமான 4 லட்சத்து 57 ஆயிரத்து 500 வெள்ளியை செலுத்துவதற்கு கடந்த ஜுன் 14 ஆம் தேதி ஜெயா ஷர்மா, வழங்கிய காசோலையில் பணம் இல்லை என்று திருப்பித்தரப்பட்டு விட்டது.
இந்தப் பணத்தை திரும்ப பெறுவதற்கு தாங்களும், தங்கள் வர்ததக சகாக்களும் முயற்சி மேற்கொண்டுள்ள வேளையில் ஜெயா ஷர்மா -, வை தாங்கள் கடத்த முயற்சி செய்வதாகவும், கொலை மிரட்டல் விடுப்பதாகவும் கூறி, அவரும், அவரின் மனைவியும் செய்த புகாரின் அடிப்படையில் தாமும், தமது வர்ததக சகாக்காளும் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டதாக விக்னேஸ்வரராவ் குறிப்பிட்டார்.
தங்களுக்கு எதிராக கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டு அடிப்படைற்றது, உண்மையில்லை என்பதை உணர்ந்த நீதிபதி, தங்களுக்கு தடுப்புக்காவல் அனுமதியை நீட்டிக்காமல் தங்கள் அனைவரையும் விடுவித்து விட்டதாக விக்னேஸ்வரராவ் தெரிவித்தார்.
இதன் தொடபில் தங்களுக்கு எதிராக பொய் புகார் அளித்து, சட்டத்தை தவறாக பயன்படுத்தி வரும் ஜெயா ஷர்மா, மற்றும் அவரின் மனைவிக்கு எதிராக போலீஸ் துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அத்துடன் சட்டப்பூர்வமாக செயல்பட்டு வரும் தங்களின் தொழில்துறையை முடக்குவதற்கு பொய் புகார் அளிக்கும் ஜெயா ஷர்மா -விற்கு எதிராக விசாரணை மேற்கொள்வதற்கு IPCC போன்ற போலீஸ் துறையின் சுயேட்சை விசாரணை ஆணையம் அமைக்கப்பட வேண்டும் என்று போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீடான்ஸ்ரீ ரஸாருதீன் – யை, விக்னேஸ்வரராவ் கேட்டுக்கொண்டுள்ளார்.