ஜொகூர் , செப்டம்பர் 17-
நாட்டின் மத்திய வங்கியான பேங்க் நெகாரா- வின் முன்னாள் கவர்னர் டான்ஸ்ரீ அகமது முகமது டான் காலமானார். அவருக்கு வயது 77. ஜோகூர்பாரு, ஜாலான் தெங்கா, ஸ்துலாங் பாரு-வில் உள்ள தனது இல்லத்தில் இன்று அதிகாலை 1.55 மணியளவில் காலமானதாக அவரின் துணைவியார் புவான் ஸ்ரீ ஹமிதா முகமது தெரிவித்தார்.
உடல் உறுப்புகள் செயலிழப்பு காரணமாக அகமது முகமது டான் அவதியுற்று வந்ததாக தெரிவிக்கப்பட்டது. 7 பிள்ளைகளுக்கு தந்தையான அகமது முகமது டான் , பேங்க் நெகாராவின் கவர்னர் டான்ஸ்ரீ ஜாஃபர் உசேன் – க்கு பதிலாக கடந்த 1994 ஆம் ஆண்டு மத்திய வங்கிக்கு பொறுப்பேற்று, 1998 ஆம் ஆண்டு வரை சேவையாற்றி வந்தார்.
மலேசிய பணநோட்டில் ஏழாவது பண நோட்டு அச்சடிப்பில் அகமது முகமது டான் – னின் கையெழுத்து இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிட்டத்தக்கது.