பாதாளக்குழிக்குள் விழுந்து மாது மரணம்

பெட்டாலிங் ஜெயா,செப்டம்பர் 17-

பினாங்கு,புக்கிட் மெர்தாஜாம் – மில் மலையேறும் நடவடிக்கையில் ஈடுபட்ட 50 வயது மாது ஒருவர் 2 மீட்டர் ஆழத்தைக் கொண்ட பாதாளக்குழிக்குள் விழுந்து மரணமுற்றார்.

இச்சம்பவம் இன்று பிற்பகல் ஒரு மணியளவில் அந்த மலைப்பகுதியில் ஜாலன் கோலம் செரோக் டோக் குன் என்ற இடத்தில் நிகழ்ந்தது. ஓ ஐ சின் என்று அடையாளம் கூறப்பட்ட அந்த மாது சம்பவ இடத்திலேயே மாண்டதாக தீயணைப்பு, மீட்புப்படை அதிகாரி அஸ்மி ஜகாரியா தெரிவித்தார்..

அறுவர் கொண்ட மீட்புக்குழுவினர், அந்த மாதுவின் சடலத்தை மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்ததாக அவர் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS