சம்பந்தப்பட்ட சந்தேகப் பேர்வழி நாளை குற்றஞ்சாட்டப்படுவார்

புத்ராஜெயா,செப்டம்பர் 17-

சமூக நல இல்லங்களில் 17 வயதுக்கு உட்பட்ட பிள்ளைகள் உடல் ரீதியாகவும், பாலியல் ரீதியாகவும் துன்புறுத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவத்தில் தொடர்புபடுத்தப்பட்ட GISB Holdings நிறுவனத்தின் முக்கிய சந்தேகப் பேர்வழி நாளை புதன்கிழமை நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த நபர் நாளை காலை 8 மணிக்கு நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார் என்று கோலாலம்பூர் போலீசார் தெரிவித்தனர்.

சம்பந்தப்பட்ட நிறுவனத்தினால் நடத்தப்பட்டு வந்தாக கூறப்படும் 20 சமூக நல இல்லங்களில் கடந்த புதன்கிழமை காலையில் போலீசார் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையில் 402 சிறார்கள் மீட்கப்பட்டனர்.

அவர்களில் 13 பேர், இயற்கைக்கு மாறான உறவில் ஈடுபட்டுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது என்று போலீசார் குறிப்பிட்டு இருந்தனர்.

WATCH OUR LATEST NEWS