ஜார்ஜ் டவுன், செப்டம்பர் 17-
பினாங்கில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் பலத்த காற்று மற்றும் கனத்த மழையினால் 200 க்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு பெயர்த்துக்கொண்டு சாய்ந்ததாக பினாங்கு முதலமைச்சர் சௌ கோன் இயோவ் தெரிவித்தார்.
மரங்கள் சாய்ந்தது தொடர்பில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பொது மக்களிடமிருந்து சுமார் 90 புகார்கள் பெறப்பட்டுள்ள வேளையில் நேற்று ஒன்பது புகார்களும், இன்று மதியம் 12 மணி வரையில் 73 புகார்களும் பெறப்பட்டுள்ளதாக முதலமைச்சர் தெரிவித்தார்.
இதில் ஐந்து வீடுகளும், எட்டு வாகனங்களும் கடுமையாக சேதமுற்றன. வானிலை ஆய்வுத்துறை வெளியிட்ட தகவலின்படி மோசமான வானிலை , நாளை புதன்கிழமை வரை நீடிக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுவதாக சௌ கோன் இயோவ் குறிப்பிட்டார்.
சாலைகளில் விழுந்து கிடக்கும் மரங்களை வெட்டி, அகற்றும் பணிகளில் ஊராட்சி மன்றங்கள் முழு வீச்சில் ஈடுபட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.