வயோதிகர் காரில் இறந்த நிலையில் கண்டு பிடிக்கப்பட்டார்

மூவார்,செப்டம்பர் 18-

ஜோகூர், மூவாரில் வயோதிகர் ஒருவர், காரில் இறந்த நிலையில் கண்டு பிடிக்கப்பட்டார். நேற்று காலை 3.30 மணியளவில் Proton saga காரில், பயணிகள் பின் இருக்கை ஒன்றில் அந்த நபர் இறந்த நிலையில் கண்டு பிடிக்கப்பட்டதாக மூவார் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ரைஸ் முக்லிஸ் அஸ்மான் அஜீஸ் தெரிவித்தார்.

63 வயதுடைய அந்த நபர், ஒரு நீரிழிவு நோயாளி என்றும் மஸ்ஜித் தனா-வில் டயாலிசிஸ் சிகிக்சை பெற்று வந்தார் என்றும் அவரின் மகன் தெரிவித்ததாக ஏசிபி ரைஸ் முக்லிஸ் குறிப்பிட்டார்.

சவப்பரிசோதனைக்காக அந்த நபரின் உடல் மூவார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக அவர் மேலும் கூறினார்

WATCH OUR LATEST NEWS