செபரங் பேராய் ,
பினாங்கில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்று காலை 7.30 மணி வரை 147 குடும்பங்களைச் சேர்ந்த 556 பேர், 11 தற்காலிக நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
நேற்று இரவு 8 மணி வரை 192 பேராக இருந்த பாதிக்கப்பட்வர்களின் எண்ணிக்கை, தற்போது 556 பேராக அதிகரித்துள்ளது என்று பினாங்கு பேரிடர நிர்வாக செயலகம் அறிவித்துள்ளது.
வெள்ளத்தில் பினாங்கு பெருநிலமான செபராங் பேரை உதரா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து செபராங் பேரை செளதன் – னும் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த செயலகம் குறிப்பிட்டுள்ளது.