போர்ட் டிக்சன் , செப்டம்பர் 18-
சமயப்பாடம் தொடர்பாக பயிற்சிக்கு வந்த 19 வயது ஆசிரியர் ஒருவரை பாலியல் பலாத்காரம் புரிந்ததாக USTAZ
ஒருவர், போர்ட்டிக்சன் மாஜிதஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.
முகமது ஹஃபிட்ஸ் எஷாக் என்ற 43 வயதுடைய அந்த USTAZ, போர்ட்டிக்சனில் உள்ள சமயப் பாட பயிற்சி மையத்தில் அந்த ஆசிரியரை மானபங்கம் செய்ததாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.
மாஜிஸ்திரேட் தமன் அப்துல் கனி முன்னலையில் நிறுத்தப்பட்ட அந்த USTAZ, தனக்கு எதிரான குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரியுள்ளார்.
அந்த சமயப்பள்ளியின் தலைவராக செயல்பட்டு வரும் அந்த USTAZ, தன்னிடம் பாடம் கற்றுக்கொள்ள வந்த ஆசிரியரியரிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.