ஈப்போ , செப்டம்பர் 18-
தைப்பிங் அருகில் ஜாலான் கமுண்டிங் – தமன் க்ளென் வியூ- வில் மரம் ஒன்று வேரோடு பெயர்த்துக்கொண்டு வாகனங்களின் மீது விழுந்ததில் மோட்டார் சைக்கிளிலில் பயணித்த இருவர் படுகாயம் அடைந்தனர். . மற்றொரு காரில் பயணித்த இருவர், சொற்ப காயங்களுக்கு ஆளாகினர்.
இச்சம்பவம் இன்று புதன்கிழமை மதியம் 12.53 மணியளவில் நிகழ்ந்தது. இதில் மற்றொரு காரும் பாதிக்கப்பட்டது. எனினும் காரில் இருந்த மூவர் எவ்வித காயமின்றி உயிர் தப்பினர் என்று பேரா மாநில தீயணைப்பு, மீட்புப்படை உதவி இயக்குநர் சபரோட்ஸி நோர் அகமது தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட காரில் 16 க்கும் 35 க்கும் இடைப்பட்ட வயதுடைய ஐந்து பெண்கள் இருந்தததாக தெரிவிக்கப்பட்டது. மோட்டார் சைக்கிளில் காயமுற்றவர்கள் தந்தையும் மகளும் என்று அடையாளம் கூறப்பட்டது.
கடும் காயங்களுக்கு ஆளான 40 வயது தந்தையும், 15 வயது மகளும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக அவர் தெரிவித்தார்.